சித்திரச் செல்வி
கண்ணிலும் நீயே கண்மலர்க் காணாக் கனவிலி னிக்கும் கருப்பொருள் நீயே விண்ணிலும் நியே விண்வெளி நிறைந்த வியன்மிகு வாழ்வின் விளக்கும் நீயே தனிமையை நீக்க இனிமையாய் வருவாய் தளிர்முகம் காட்டி புளகிதம் தருவாய் மனமெனும் பொழிலில் எழிலுரு பெருவாய் மந்தமா ருதமாய் வந்தெனைத் தொடுவாய் அருகினி லமர்ந்து கண்ணிமைக் காமல் அதிசயப் பொருள்போல் என்னையே பார்ப்பாய் உரிமையாய் நெருங்கி உன்னுயிர் மூச்சும் உணர்ச்சியும் என்மேல் ஊர்வலம் விடுவாய் புத்தக மெடுத்தால் அத்தனை எழுத்திலும் புகுந்துநீ மாயப் புன்னகை புரிவாய் நித்திரை நேரம் முத்தமிழ் சுவைபோல் நெஞ்சினில் புதிய பஞ்சணை விரிப்பாய் சித்திரச் செல்வி சிறுநடை பயிலும் சிந்தூரச் சிமிழே சந்தனச் சுடரே ! பத்தரை மாற்றுப் பசும் பொற்கிழியே ! பால்மணங் கமழும் பவளவாய்க் கிளியே !!
- இளங்கண்ணன்.
இங்கே கிளிக்குங்கள்
கண்டுகளியுங்கள் வர்ணஜாலத்தை.
http://inoyan.narod.ru/kaleidoskop.swf
அன்றே எழுதியது !
தோகைமயில்
ஆடும் மேகம் நதி ஆல்வளரும் காடுகளில்
ஆசையுடன் தானவளை நோக்குகின்றேன்
ஆயதமிழோசைவர பாடுவதில் ஆசைவர
ஆனவரை நானவளைப் பாடுகின்றேன்
கோடுகளி லேறியதில் குலவுபனிச் சாரலிலே
குமரிதனைக் கொஞ்சி விளையாடுகின்றேன்
கூவுகுயில் கிள்ளைமயில் குக்குவெனும் வெண்புறாவின்
கூட்டமதில் எனைமறந் தோடுகின்றேன்
ஓடுகின்ற தேருடைய திருநெல்லை நகரில் வளர்
ஒரு மகளே திரு மகளென்று அறிந்தாடு ஆசைமயிலே!
தூயமனக் காதலுடன் துடிக்கும் நெஞ்சின் தாபங்களை
தூது சென்று செப்பிடுவாய் தோகைமயிலே!!
**********************
வேங்கடத்தான் நாயகி
ஏங்கிடத்தான் வைத்து விட்டாய் எத்தனையோ நெடுங்காலம்
வேங்கடத்தான் நாயகியே வேண்டும்வரம் தருபவளே
பொங்கிடுதே எந்தன்மனம் பொன்மகளின் வரவுகேட்டு
வீங்கிடுதே விம்மிடுதே வெடிக்குமோர் எல்லைவரை
வாங்கிடுவேன் வாயமுதம் வட்டியுடன் முதலுஞ்சேர்த்து
தாங்கிடுவேன் தண்முகத்தை தவறாமல் தடமார்பில்
பாங்குடனே வாழ்துகிறேன் பாலனிவன் பால்மதில்
நீங்காமல் நிந்தரமாய் நெடுங்காலம் வாழ்பவளே !!